/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் நாய் கடித்து 7 பேர் காயம்
/
திருப்புவனத்தில் நாய் கடித்து 7 பேர் காயம்
ADDED : நவ 07, 2025 04:08 AM
திருப்புவனம்: திருப்புவனத்தில் நேற்று மாதாந்திர மின் தடை என்பதால் காற்றுக்காக முதியோர்கள் பலரும் வாசல் கதவை திறந்து வைத்து துாங்கி கொண்டிருந்தனர். முதலியார் தெரு, நாடார் தெரு உள்ளிட்ட தெருக்களில் வெறி நாய் ஒன்று வீடு புகுந்து துாங்கி கொண்டிருந்தவர்களின் தலையில் கடித்து குதறியது. பின்னர் ரோட்டில் நடந்து சென்றவர்களையும் விரட்டி கடித்தது. இதில் காயமடைந்த சரசு 83, செல்வம் 65, ஈஸ்வரி 55, ராஜேஸ்வரன் 20, ஆகியோர் திருப்புவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
துப்புரவு ஆய்வாளர் பாண்டியன் கூறுகையில் : திருப்புவனத்தில் கடந்த வாரம் 43 தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த நாய் அருகில் உள்ள கிராமத்தில் இருந்து வந்திருக்கும், என்றார்.

