ADDED : நவ 07, 2025 04:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில் அனைத்து ஓட்டுச்சாவடி முகவர்கள் மாநாடு நடத்துவதற்கான பா.ஜ.,நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
சட்டமன்ற அமைப்பாளர் சத்தியநாதன் தலைமை வகித்தார். இணை அமைப்பாளர் நாகேஸ்வரன் முன்னிலை வகித்தார். பெருங்கோட்ட அமைப்பு செயலாளர் ராமசேகர், மாவட்ட தலைவர் பாண்டித்துரை ஆலோசனை வழங்கினர். மாவட்ட துணைத்தலைவர்கள் சுகனேஸ்வரி, ராஜாசம்பத், கந்தசாமி, மாவட்ட பொதுச்செயலாளர் சுப்புக்காளை, செயற்குழு உறுப்பினர் சொக்கலிங்கம், நகர் தலைவர் உதயா, நகர் பொது செயலாளர் பாலா கலந்து கொண்டனர்.

