/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சம்பக சஷ்டி விழா நவ.20 ல் ந.வைரவன்பட்டியில் துவக்கம்
/
சம்பக சஷ்டி விழா நவ.20 ல் ந.வைரவன்பட்டியில் துவக்கம்
சம்பக சஷ்டி விழா நவ.20 ல் ந.வைரவன்பட்டியில் துவக்கம்
சம்பக சஷ்டி விழா நவ.20 ல் ந.வைரவன்பட்டியில் துவக்கம்
ADDED : நவ 07, 2025 04:09 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே ந.வைரவன்பட்டி வளரொளிநாதர்,வயிரவசுவாமி கோயிலில் சம்பக சஷ்டி விழா நவ.20ல் துவங்குகிறது.
நகரத்தார் கோயிலான இங்கு வயிரவர் சுவாமி, அம்பாள் சன்னதிகளுக்கு நடுவில் தனி சன்னதியில் எழுந்தருளுகிறார். நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இங்கு சம்பக சஷ்டி விழா ஆறு நாட்கள் நடைபெறுகிறது.
துவக்க விழாவை முன்னிட்டு நவ.20 காலை 10:00 மணிக்கு அனுக்ஞை,கணபதி ஹோமத்துடன் யாக பூஜைகள் துவங்குகின்றன.
தொடர்ந்து காப்புக்கட்டி விழா துவங்குகிறது. இரவு 7:00 மணிக்கு அலங்காரத்தில் மூலவருக்கு சிறப்பு ஆராதனை நடைபெறுகின்றன. தொடர்ந்து நவ.21ல் முதலாம் திருவிழா நடைபெறும்.
காலை 10:00 மணிக்கு ஹோமம்,தீபாராதனை நடைபெறும். இரவு 7:30 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.
தொடர்ந்து காலையில் ேஹாமம்,தீபாராதனை, இரவில் சுவாமி புறப்பாடு நடைபெறும். நவ.25ல் ஐந்தாம் நாளில் மாலையில் விடுதிக்கு சுவாமி எழுந்தருளி அஷ்டபைரவ அர்ச்சனை, தீபாராதனை நடைபெறும்.
இரவு 7:30 மணிக்கு ஊஞ்சலில் சுவாமி கோயில் வலம் வருவார். நவ.26ல் காலை 10:00 மணிக்கு வயிரவருக்கு அபிஷேக, ஆராதனை நடைபெறும். மாலையில் வயிரவர் எழுந்தருளி சம்பகா சூரசம்ஹாரம் நடைபெறும். இரவில் பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெறும். ஏற்பாட்டினை ஏழகப் பெருந்திருவான வயிரவன்கோயில் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள், விழாக்கமிட்டியினர் செய்கின்றனர்.

