/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை ஆட்டோ டிரைவர் கொலையில் 7 பேர் கைது
/
சிவகங்கை ஆட்டோ டிரைவர் கொலையில் 7 பேர் கைது
ADDED : நவ 04, 2024 11:16 PM

சிவகங்கை ; சிவகங்கை அருகே கீழவாணியங்குடியில் தீபாவளியன்று ஆட்டோ டிரைவர் மணிகண்டன் 40, கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை அருகே கீழவாணியங்குடி கண்மாய்கரையில் தீபாவளியன்று மாலை 5:00 மணிக்கு, ராஜாங்கம் மகன் ஆட்டோ டிரைவர் மணிகண்டன் 40, ரவி மகன் அருண்குமார் 26, கணேசன் மகன் ஆதிராஜா 50, ஆகியோர் பேசிக்கொண்டிருந்தனர். அங்கு 2 டூவீலர்களில் வந்த கும்பல், வாளால் மூன்று பேரையும் வெட்டிவிட்டு தப்பினர். சம்பவ இடத்திலேயே மணிகண்டன் உயிரிழந்தார்.
குற்றவாளிகளை பிடிக்க சிவகங்கை டி.எஸ்.பி., அமலா அட்வின் தலைமையில் 4 தனிப்படை அமைத்தனர். கோவானுார் அங்குசாமி மகன் ரஞ்சித் 20, கீழக்குளம் கிருஷ்ணன் மகன் விக்னேஷ் 21, மதுரை செக்கானுாரணி கண்ணன் மகன் கார்த்திக் 21, கீழக்குளம் புத்தடி வேங்கை மகன் திருமூர்த்தி 29, ராமர் மகன் மாசணம் 21, அர்ச்சுணன் மகன் முத்துக்குமார் 36, குருநாதன் மகன் கணேசன் 20 ஆகிய 7 பேரையும் தனிப்படையினர் கைது செய்தனர். கிரிக்கெட் பிரச்னையில் கொலை நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.