/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ராஜகம்பீரத்தில் ஒரே நாளில் 7 பேருக்கு நாய்க்கடி
/
ராஜகம்பீரத்தில் ஒரே நாளில் 7 பேருக்கு நாய்க்கடி
ADDED : பிப் 18, 2025 05:02 AM
மானாமதுரை: ராஜகம்பீரத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி சென்னத்துல் அலியா. அவரது தாய் செய்யது அலி பாத்திமாவோடு பள்ளிக்கு சென்றார்.
தெருவில் சுற்றிய நாய் முதலில் சிறுமியை கடித்தது அவரது தாய் காப்பாற்ற முயன்ற போது அவரையும் கடித்தது.பின்னர் அதே பகுதியைச் சேர்ந்த மூதாட்டி பூமயில் 70, என்பவரை தொண்டையில் கடித்ததில் காயம் ஏற்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ராஜ கம்பீரத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் 7 பேரை நாய் கடித்ததில் காயமடைந்தவர்கள் மானாமதுரை,முத்தனேந்தல் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்குள் மட்டும் மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளில் 30க்கும் மேற்பட்டோரை நாய்கள் கடித்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

