/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நான்கு மாதத்தில் 910 பேர் நாய்க்கடியால் பாதிப்பு
/
நான்கு மாதத்தில் 910 பேர் நாய்க்கடியால் பாதிப்பு
ADDED : ஏப் 24, 2025 07:01 AM
சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு தினசரி 1000த்திற்கும் மேற்பட்டோர் புற நோயாளிகளாக சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.
டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள், பணியாளர்கள், மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் என 2000 பேர் பணி புரிகின்றனர். இந்த வளாகத்தில் நாளுக்கு நாள் நாய்களின் தொல்லை அதிகரித்து உள்ளது.
மருத்துவமனை வளாகத்தில் கடந்த மாதம் மட்டும் 3 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். தினசரி நகரின் மற்ற பகுதியில் நாய்க்கடிக்கு ஆளான பலர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நாய்க்கடிக்கு தடுப்பூசி போட்டு வருகின்றனர். நேற்று காலை 8:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை மட்டும் 10 பேர் சிவகங்கை நகரில் நாய் கடிபட்டு சிகிச்சைக்கு வந்தனர். கடந்த ஆண்டு மட்டும் 1,100 பேரை நாய் கடித்து சிகிச்சை பெற்றுள்ளனர்.
இந்தாண்டு இதுவரை 910 பேர் நாய் கடிக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். தெருவில் கட்டுப்பாடின்றி பெருகும் நாய்களை கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.