/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சேதமடைந்த மின்கம்பம் புதிய கம்பத்திற்கு மாறாத இணைப்பு
/
சேதமடைந்த மின்கம்பம் புதிய கம்பத்திற்கு மாறாத இணைப்பு
சேதமடைந்த மின்கம்பம் புதிய கம்பத்திற்கு மாறாத இணைப்பு
சேதமடைந்த மின்கம்பம் புதிய கம்பத்திற்கு மாறாத இணைப்பு
ADDED : அக் 19, 2024 05:40 AM

திருப்புத்துார் : திருப்புத்துார் அருகே காரையூர் செல்லும் ரோட்டில் உள்ள புதிய மின் கம்பத்திற்கு மின் இணைப்பை மாற்ற கிராமத்தினர் கோரியுள்ளனர்.
திண்டுக்கல் ரோட்டிலிருந்து இக்கிராமத்திற்கு செல்லும் விலக்கு ரோட்டில் உள்ள ஒரு மின்கம்பம் சிமென்ட் காரை பெயர்ந்து
விழும் அபாயத்தில் உள்ளது. கிராமத்தினர் கான்கிரீட் போட்டு கம்பத்தை விழாமல் தடுத்துள்ளனர்.
புதிய மின்கம்பம் அமைக்க கிராமத்தினர் கோரியதை அடுத்து மின்துறையினர் புதிய மின்கம்பத்தை சேதமடைந்த மின் கம்பம் அருகில் ஊன்றினர். பல நாட்களாகியும் புதிய கம்பத்திற்கு மின் இணைப்பை மாற்றவில்லை.
தற்போது பருவமழை பெய்யத்துவங்கியுள்ளது. பலத்த காற்றுடன் மழை பெய்தால் பழைய கம்பம் சாய்ந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், கிராமத்தினர் புதிய கம்பத்திற்கு மின் இணைப்பை மாற்ற மின்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர்.