/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஏ. நெடுங்குளத்தில் கண்மாய்கரை உடைப்பு நீர் வெளியேறியதால் விவசாயிகள் கவலை

ADDED : டிச 27, 2024 04:53 AM

மானாமதுரை: மானாமதுரை அருகே ஏ.நெடுங்குளத்தில் மர்ம நபர்கள் மண் அள்ளும் இயந்திரங்களைக் கொண்டு கண்மாய் கரையை உடைத்ததால் முழுமையாக நீர் வெளியேறியது. அப்பகுதியில் விவசாயம் கேள்விக்குறியாகி உள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
மானாமதுரை கிளாங்காட்டூர் அருகே பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் ஏ. நெடுங்குளம் கண்மாய் உள்ளது. 100 ஏக்கர் பரப்பளவு உள்ள இக்கண்மாய் மூலம் 350 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் பெய்த மழை காரணமாக ,அரிமண்டபம் கண்மாய் முழுமையாக நிரம்பியதால் அக்கண்மாயிலிருந்து வெளியேறிய தண்ணீரும் ஏ.நெடுங்குளம் கண்மாய்க்கு சென்று சேர்ந்ததில் முழுமையாக நிரம்பி உள்ளது.
விவசாயிகள் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் மண் அள்ளும் இயந்திரங்களைக் கொண்டு கண்மாயின் ஒரு பக்கத்தில் உள்ள கரையை உடைத்ததால் கண்மாயில் இருந்த தண்ணீர் முழுமையாக ஓடை வழியாக வெளியேறியதை பார்த்த விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
கண்மாய் கரையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏ. நெடுங்குளம் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் மானாமதுரை போலீஸ் ஸ்டேஷனிலும் புகார் கொடுத்துள்ளனர்.