/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காலி இருக்கைகள் நிரம்பிய குறைதீர் கூட்ட அரங்கு
/
காலி இருக்கைகள் நிரம்பிய குறைதீர் கூட்ட அரங்கு
ADDED : ஜன 14, 2025 05:18 AM
சிவகங்கை: பொங்கல் தினத்தை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில்நேற்று நடந்த குறைதீர் கூட்டத்திற்கு அதிகாரிகள் வராததால், இருக்கைகள் காலியாக காணப்பட்டன.
திங்கள் தோறும் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் பொதுகுறைதீர் கூட்டம் நடைபெறும். மாதத்தின் முதல் திங்களன்று மட்டுமே மாவட்ட அளவிலான துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். மற்ற நாட்களில் அந்தந்த துறைகளில் இளநிலை உதவியாளர், உதவியாளர், துணை தாசில்தார், துணை பி.டி.ஓ., நிலையிலான அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
கலெக்டரிடம் பொதுமக்கள் தரும் மனுக்கள் அந்தந்த துறை அலுவலர்கள் மூலம் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்படும். நேற்று காலை கலெக்டர் கீழடி பொங்கல் விழாவிற்கு சென்றுவிட்டார். இதனால் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். பொங்கலை முன்னிட்டு இன்று முதல் வெள்ளி வரை தொடர் விடுமுறை அறிவித்துள்ளனர்.
நேற்று வாரத்தின் முதல்நாளான திங்களன்று கூட கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்ட அறைக்கு பெரும்பாலான அதிகாரிகள் வராமல், குறைதீர் கூட்ட அரங்கில் இருந்த இருக்கைகள் அனைத்தும் காலியாக இருந்தன. இதனால் மனு அளிக்க வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.