/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துார் கோட்டைக் கருப்பர் கோயில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
/
திருப்புத்துார் கோட்டைக் கருப்பர் கோயில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
திருப்புத்துார் கோட்டைக் கருப்பர் கோயில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
திருப்புத்துார் கோட்டைக் கருப்பர் கோயில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
ADDED : பிப் 21, 2024 11:37 PM

திருப்புத்துார்- திருப்புத்துார் நகரின் காவல் தெய்வமான கோட்டைக்கருப்பண்ண சுவாமி கோயிலில் 17 ஆண்டுகளுக்கு பின்னர்நடந்த கும்பாபிேஷக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருப்புத்துார் நகரில் புராதன கோட்டையின் கிழக்கு திசையில் பிரதான வாசலில் அமைந்துள்ளதுகோட்டைக்கருப்பர் கோயில். இங்கு சேமக்குதிரைகள், உறங்காப்புளி மரம் இவற்றுடன் விநாயகர், பாலமுருகன், கோட்டைக்கருப்பர், சங்கிலிக்கருப்பர், காளியம்மன், ராக்காச்சி அம்மன், பேச்சிஅம்மன், பரிவார தெய்வங்கள் அடங்கிய சன்னதிகள் உள்ளன. இக்கோயிலுக்கு 2007ல் கும்பாபிேஷகம் நடந்தது. தற்போது 17 ஆண்டுகளுக்குப் பின்னர் திருப்பணி நடந்தது.
கும்பாபிேஷகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜை பிப்.18ல் துவங்கியது. பெ.நமசிவாய சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சார்யார்களால் மூன்று நாட்கள் ஐந்து கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது. யாகசாலை பூஜையில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்றார். நேற்று காலை 6:00 மணிக்கு ஆறாம் கால யாகசாலை பூஜை துவங்கி 9:30 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து சிவாச்சார்யார்களால் கலசங்கள் புறப்பாடாகி மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களின் 7 விமான கலசங்களை அடைந்தது. தொடர்ந்து மந்திரங்கள் முழங்க, வாத்தியங்கள் ஒலிக்க விமானங்களுக்கு காலை 9:50 மணிக்கு யாகசாலை புனிதநீரால் கும்பாபிேஷகம் நடந்தது. குன்றக்குடி பொன்னம்பல அடிகள் முன்னிலை வகித்தார்.
புனித நீர் பக்தர்கள் மீது ட்ரோன் மூலம் தெளிக்கப்பட்டது. பின்னர்விமான கலசங்களுக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, மூலவர் கோட்டைக்கருப்பர், சங்கிலிக்கருப்பர், காளியம்மன், ராக்காச்சியம்மன், பேச்சியம்மன், விநாயகர்,பாலமுருகன் ஆகியோருக்கு மகா அபிேஷகம் நடந்தது.
நாட்டார், நகரத்தார், திருப்புத்துார் கிராமத்தினர்,குலதெய்வ வழிபாடும் ஊரார், பரம்பரை பூசகர்கள்பங்கேற்றனர். கோயில் சார்ந்த கிராமங்களிலிருந்து பட்டு மரியாதையுடன் ஊர்வலமாக சாமியாடிகளுடன் வந்து பங்கேற்றனர். பக்தர்கள் திரளாகக் கூடி கும்பாபிேஷகத்தை தரிசித்தனர்.
ஏற்பாட்டினை அறங்காவலர் எஸ்.வயிரவன் தலைமையில் துணைத் தலைவர்கள் சித.வயி.லெட்சுமணன், அழ.சி.ராமசுவாமி, செயலாளர்மா.அண்ணாத்துரை, துணைச் செயலாளர்கள் பழ.சிவப்பிரகாசம், வெளியாரி மு.காசிநாதன், பொருளாளர் மீ.மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட திருப்பணிக்குழுவினர் செய்தனர். யாகசாலை துவங்கியது முதல் அன்னதானம் நடந்தது.
கலை நிகழ்ச்சி, பட்டிமன்றம், கருப்பர் புகழ் பாடல் வெளியீடு நடந்தது.