/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை பிஷப் இல்லத்தில் ரூ.24.95 லட்சம் கையாடல் கணக்கராக பணிபுரிந்தவர் கைது

ADDED : அக் 06, 2024 01:45 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் சிவகங்கை பிஷப் இல்லத்தில் 2019 முதல் கணக்கராக பணிபுரிந்தார். அவரது நடவடிக்கை சந்தேகமாக இருந்ததால் ஜூலை மாதத்துடன் பணியில் இருந்து நிறுத்தப்பட்டார்.
அங்கு பொருளாளராக ஆரோக்கியசாமி பணிபுரிகிறார். இவர் பிஷப் இல்ல வங்கி கணக்குகளை ஆய்வு செய்தார். அதில் பல்வேறு குளறுபடிகள் இருந்தன. கணக்கராக பணிபுரிந்த பிரவீன் போலியான பணிகளை செய்ததாக 5 பேருக்கு காசோலை மூலம் ரூ.24 லட்சத்து 95 ஆயிரம் அனுப்பியது போல் கையாடல் செய்தது தெரியவந்தது.
ஆரோக்கியசாமி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். பிரவீனை இன்ஸ்பெக்டர் மன்னவன் கைது செய்து விசாரித்து வருகிறார்.