/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் தள்ளுவண்டியான அரசு பஸ்
/
காரைக்குடியில் தள்ளுவண்டியான அரசு பஸ்
ADDED : ஜன 14, 2025 10:36 PM

காரைக்குடி; காரைக்குடியில் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரைக்கு புறப்பட வேண்டிய அரசு பஸ் பழுதானதால், பயணிகள் தள்ளி விடும் நிலை ஏற்பட்டது.
காரைக்குடியில் இருந்து மதுரை உட்பட பல்வேறு நகரங்களுக்கு 120க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக பொங்கல் பண்டிகைக்கு சென்னை, கோயம்புத்துார், திருப்பூர் போன்ற நகரங்களில் இருந்து பயணிகள் வருவதற்கு ஏதுவாக சிறப்பு பஸ்களும் இயக்கினர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காரைக்குடியில் இருந்து மதுரைக்கு அரசு பஸ் புறப்பட்டது. ஆனால், பஸ் பழுதானதால் பயணிகள், கண்டக்டர், டிரைவர்கள் தள்ளிவிட்டு, பஸ்சை புறப்பட செய்தனர்.
அரசு போக்குவரத்து கழக பஸ்கள் உரிய பராமரிப்பின்றி உள்ளதால், அடிக்கடி ரோட்டில் பழுதாகி நிற்பதும், பஸ் புறப்படும் முன்பே பழுதாகி பஸ் ஸ்டாண்டிற்குள் நிற்பதும் வாடிக்கையாகி விட்டது.