/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நிபந்தனை ஜாமின் கையெழுத்திட்டு திரும்பிய வாலிபர் காரைக்குடியில் வெட்டி படுகொலை; மூவர் கைது
/
நிபந்தனை ஜாமின் கையெழுத்திட்டு திரும்பிய வாலிபர் காரைக்குடியில் வெட்டி படுகொலை; மூவர் கைது
நிபந்தனை ஜாமின் கையெழுத்திட்டு திரும்பிய வாலிபர் காரைக்குடியில் வெட்டி படுகொலை; மூவர் கைது
நிபந்தனை ஜாமின் கையெழுத்திட்டு திரும்பிய வாலிபர் காரைக்குடியில் வெட்டி படுகொலை; மூவர் கைது
ADDED : மார் 21, 2025 11:37 PM

காரைக்குடி; சிவகங்கை மாவட்டம் காரைக்குடி போலீஸ் ஸ்டேஷனில் நிபந்தனை ஜாமின் கையெழுத்திட்டு திரும்பிய வாலிபர் மனோ என்ற மனோஜ்குமாரை 23, வெட்டி படுகொலைசெய்ததில் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
காரைக்குடி சேர்வார் ஊருணியைச் சேர்ந்த சேட்டு மகன் மனோ என்ற மனோஜ் குமார் மீது கஞ்சா, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. சில மாதங்களுக்கு முன் திருச்சி- ராமேஸ்வரம் பைபாஸ் ரோட்டில் கஞ்சா கடத்தல் வழக்கில் மனோஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இவ்வழக்கில் நிபந்தனை ஜாமினில் வெளி வந்தவர் நேற்று காரைக்குடி வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு திரும்பினார். அவர் நண்பர்கள் கார்த்திக் மற்றும் சபிக் ஆகியோருடன் டி.டி.நகர் 5வது வீதியில் இரு டூவீலர்களில் சென்றனர். அப்போது பின்னால் வேகமாக வந்த கார் அவர்கள் சென்ற டூவீலர்கள் மீது மோதியது. இதில் கார்த்திக் மற்றும் சபிக் இருவரும் கீழே விழுந்தனர்.
காரிலிருந்து வாள் மற்றும் அரிவாளுடன் 4 பேர் இறங்கியதை கண்ட மனோஜ் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அவரை விரட்டிச் சென்ற கும்பல் புது பஸ் ஸ்டாண்ட் நுாறடி ரோட்டில் வைத்து வெட்டி படுகொலை செய்து காரில் தப்பியது.
டி.எஸ்.பி., பார்த்திபன் மேற்பார்வையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது. விசாரணையில் கொலையாளிகள் தப்பிய கார் குன்றக்குடி அருகே சிராவயல் பகுதியில் கைப்பற்றப்பட்டது.
2023ல் மதுரையைச் சேர்ந்த வினித் 27, நிபந்தனை ஜாமினில் கையெழுத்திட வந்த போது போலீஸ் ஸ்டேஷன் ரோட்டில் வைத்து ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இக்கொலையால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
மூவர் கைது
சிவகங்கை மாவட்ட எஸ்.பி., ஆசிஷ்ராவத் கூறியதாவது: காரைக்குடியில் மனோஜ் குமார் கொலையில் தொடர்புடையவர்கள் பயன்படுத்திய கார் சிராவயல் அருகே நிற்பது தெரிய வந்தது. அதிலிருந்த இரண்டு வாள்கள் கைப்பற்றப்பட்டன. இக் கொலை தொடர்பாக அண்ணாநகரை சேர்ந்த குருபாண்டி, விக்கி என்ற விக்னேஷ், சக்திவேல் ஆகிய மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
2021 ல் காரைக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த குருபாண்டி தந்தை லட்சுமணன் கொலை செய்யப்பட்டார். இதற்கு பழி வாங்கும் வகையில் லட்சுமணனின் மகன் குருபாண்டி கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.