/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருக்கோஷ்டியூரில் ஜூலை 18ல் ஆடிப்பூர உற்ஸவம் துவங்குகிறது ஜூலை 28ல் ஆடிப்பூர தேரோட்டம்

ADDED : ஜூலை 15, 2025 03:43 AM
சிவகங்கை: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் ஜூலை 18 முதல் 29 வரை ஆடிப்பூர உற்ஸவம் நடைபெறுகிறது.
சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் ஜூலை 18 அன்று மாலை 5:22 மணிக்கு சேனை புறப்பாடுடன் ஆடிப்பூர உற்ஸவ விழா துவங்குகிறது. தினமும் ஆண்டாள், பெருமாளுடன் காலையில் திருவீதி புறப்பாடு நடைபெறும். இரவில் சுவாமி அம்பாளுடன் பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா நடைபெறும். ஜூலை 26 அன்று இரவு குதிரை வாகனத்தில் ஆண்டாள், பெருமாளுடன் வீதி உலா வருவார்.
பத்தாம் நாளான ஜூலை 28 அன்று காலை 9:37 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி அம்பாளுடன் எழுந்தருள்வார். தேரில் எழுந்தருளிய பெருமாளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடைபெறும். அன்று மாலை 4:00 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெறும்.
ஜூலை 29 அன்று காலை 11:00 மணிக்கு தீர்த்தவாரி உற்ஸவமும், இரவில் தங்கதோளுக்கினியாளில் ஆஸ்தானத்தில் ஆண்டாளுடன் பெருமாள் எழுந்தருள்வார்.