/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
துாங்கும் உள்ளாட்சி அமைப்புகள் ரோட்டில் திரியும் மாடுகளால் விபத்து
/
துாங்கும் உள்ளாட்சி அமைப்புகள் ரோட்டில் திரியும் மாடுகளால் விபத்து
துாங்கும் உள்ளாட்சி அமைப்புகள் ரோட்டில் திரியும் மாடுகளால் விபத்து
துாங்கும் உள்ளாட்சி அமைப்புகள் ரோட்டில் திரியும் மாடுகளால் விபத்து
ADDED : டிச 11, 2025 05:39 AM

காரைக்குடி: காரைக்குடியில் சாலைகளை ஆக்கிரமிக்கும் மாடுகளால் விபத்துக்கள் தொடர்கிறது.
காரைக்குடி மாநகராட்சி பகுதியில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரியும் நாய்களால் விபத்து அபாயம் விலகி வரும் நிலையில், தற்போது மாடுகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரவில் சாலைகளில் கூட்டமாக படுத்து ஓய்வெடுக்கும் மாடுகளால் விபத்து தொடர்கதையாகி வருகிறது. காரைக்குடி மட்டுமின்றி பள்ளத்துார், கல்லல், கோட்டையூர், கோவிலுார், உட்பட பல பகுதிகளில் மாடுகள் கூட்டம் கூட்டமாக சாலைகளில் சுற்றி திரிகிறது. புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
சிவகங்கை தொண்டி ரோடு, மேலுார் ரோடு, திருப்புத்துார் ரோடு, காந்திவீதி, மஜித்ரோடு, பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மாடுகள் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் பயணிக்கின்றனர். இரவில் மாடுகள் சென்டர் மீடியன் அருகே ரோட்டில் படுத்து கிடக்கிறது.
மேலுார் ரோட்டில் மட்டும் மாடு குறுக்கே வந்ததில் காந்திவீதி காய்கறி கடைக்காரர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
நடவடிக்கை எடுக்க வேண்டிய உள்ளாட்சி அமைப்புகள் எச்சரிக்கை விடுப்பதுடன் சரி. மாடுகளை பிடித்து பராமரிக்க போதிய நிதி இல்லாததால் நடவடிக்கை எடுப்பதில்லை. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் ரோட்டில் திரியும் மாடுகளை பறிமுதல் செய்து உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

