/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மின்கம்பத்தில் தாழ்வாக சுவிட்ச் விபத்தில் சிக்கும் அபாயம்
/
மின்கம்பத்தில் தாழ்வாக சுவிட்ச் விபத்தில் சிக்கும் அபாயம்
மின்கம்பத்தில் தாழ்வாக சுவிட்ச் விபத்தில் சிக்கும் அபாயம்
மின்கம்பத்தில் தாழ்வாக சுவிட்ச் விபத்தில் சிக்கும் அபாயம்
ADDED : டிச 11, 2025 05:38 AM

காரைக்குடி: சாக்கோட்டை அருகே உள்ள பிரம்பவயலில் மின்கம்பத்தில் சுவிட்ச் தாழ்வாக பொருத்தப்பட்டுள்ளதால், மழைக்காலங்களில் சிறுவர் சிறுமியர்களுக்கு அபாயம் ஏற்படும் நிலை உள்ளது.
சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பிரம்பவயல் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இரவு நேரங்களில் மின்விளக்கு இல்லாமல் இருளில் மூழ்கிக் கிடப்பதாக எழுந்த புகாரின் பேரில் மின்கம்பங்களில் குண்டு பல்பு பொருத்தப்பட்டுள்ளது. பல்பை ஆன் செய்வதற்கு, வயர் இணைக்கப்பட்டு மின்கம்பத்தின் கீழ் புறத்தில் சுவிட்ச் அமைக்கப்பட்டுள்ளது.
கிராமத்தின் பல இடங்களிலும், மின்கம்பத்திலேயே சுவிட்ச் அமைக்கப்பட்டுள்ளது. எளிதாக ஆன் செய்யவும் ஆப் செய்யவும் இந்த சுவிட்ச் அமைக்கப்பட்டிருந்தாலும், மழைக்காலங்களில் அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளது. மின்கம்பத்தில் இருந்து தரைக்கு சற்று உயரத்தில் சுவிட்ச் வைக்கப்பட்டுள்ளதால், சிறுவர் சிறுமியர் இயக்க முயன்றால் மின்சாரம் பாய்ந்து உயிர்பலி வாய்ப்பு உள்ளது.

