sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சத்துணவு ஊழியர் பணிக்கு விண்ணப்பித்தோருக்கு வேலை கிடைக்குமா நேர்காணல் முடிந்த நிலையில் 4 மாதமாக புலம்பல்

/

சத்துணவு ஊழியர் பணிக்கு விண்ணப்பித்தோருக்கு வேலை கிடைக்குமா நேர்காணல் முடிந்த நிலையில் 4 மாதமாக புலம்பல்

சத்துணவு ஊழியர் பணிக்கு விண்ணப்பித்தோருக்கு வேலை கிடைக்குமா நேர்காணல் முடிந்த நிலையில் 4 மாதமாக புலம்பல்

சத்துணவு ஊழியர் பணிக்கு விண்ணப்பித்தோருக்கு வேலை கிடைக்குமா நேர்காணல் முடிந்த நிலையில் 4 மாதமாக புலம்பல்


ADDED : டிச 11, 2025 05:37 AM

Google News

ADDED : டிச 11, 2025 05:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை ; பள்ளி சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 1,024 சமையலர், உதவியாளர்,

அங்கன்வாடி ஊழியர், பணியாளர் பணிக்கு நேர்காணல் நடத்தி 4 மாதங்களை கடந்த பின்பும்

அரசு மவுனம் காப்பதால் வேலை கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சிவகங்கை மாவட்ட அளவில் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் உள்ள 1,285 சத்துணவு மையங்கள் மூலம் மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டு வருகின்றனர். இந்த மையங்களில் காலியாக உள்ள 990 சமையலர், உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இதற்கான கல்வி தகுதி 10 ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வி என நிர்ணயித்திருந்தனர்.

இந்த பணிக்கே எம்.ஏ., எம்.பில்., பி.இ., பட்டதாரிகள் என 2,200 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இவர்களில் 1,287 பேருக்கு கடந்த செப்., மாதத்தில் நேர்முக தேர்வு நடத்தினர். அதே போன்று மாவட்ட அளவில் உள்ள 1,552 அங்கன்வாடி, குறுவள மையங்களில் ஊழியர், பணியாளர் என 34 காலியிடங்களுக்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்ததில், 1000 பேர் வரை நேர்முக தேர்வில் பங்கேற்றனர்.நேர்முகதேர்வு முடிந்து 4 மாதங்களான நிலையில் ஆணை வழங்கப்படாமல் இருப்பதால், வேலை எப்போது கிடைக்குமோ என்ற ஏக்கத்தில் விண்ணப்பதாரர்கள் புலம்பி தவிக்கின்றனர்.அமலாக்கத்துறையால் சிக்கலா

தற்போது நகராட்சி துறையில் ரூ.1,020 கோடி முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை எழுப்பிய புகாரை அடுத்து கூட்டுறவு துறை, அரசு போக்குவரத்து கழகங்களில் நேர்முக தேர்வு நடத்திய நிலையில் பணி நியமனத்தை நிறுத்தி வைத்துள்ளனர். அதே போன்று சத்துணவு, அங்கன்வாடி பணியாளர் நியமனத்திலும் சர்ச்சை எழுந்துவிடாமல் இருக்க, பணி நியமனத்தை நிறுத்தி வைத்திருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.

ஜன.,யில் நியமன ஆணை

சத்துணவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சமையலர், ஊழியர், பணியாளருக்குரிய காலியிடங்களை நிரப்ப நேர்முக தேர்வு நடத்தி பட்டியல் தயாரித்து சென்னை இயக்குனரகத்திற்கு அனுப்பி விட்டோம். ஜன., முதல் வாரத்தில் நியமன ஆணை அந்தந்த நபருக்கே அனுப்ப வாய்ப்பு இருக்கிறது என்றனர்.






      Dinamalar
      Follow us