/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பகலில் பறவை இரவில் பன்றிகள் மானாமதுரை விவசாயிகள் கவலை
/
பகலில் பறவை இரவில் பன்றிகள் மானாமதுரை விவசாயிகள் கவலை
பகலில் பறவை இரவில் பன்றிகள் மானாமதுரை விவசாயிகள் கவலை
பகலில் பறவை இரவில் பன்றிகள் மானாமதுரை விவசாயிகள் கவலை
ADDED : டிச 11, 2025 05:39 AM

மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள கிராமப்புற வயல்களில் பகலில் பறவைகளினாலும்,இரவில் பன்றிகளினாலும் நெற்பயிர்கள் சேதமடைந்து வருவதை தடுக்க விவசாயிகள் பல்வேறு தடுப்பு முறைகளை கையாண்டு வருகின்றனர்.
மானாமதுரை அருகே உள்ள முத்தனேந்தல் கிராமத்தில் விவசாயிகள் நெல் விவசாயம் செய்து வருகின்றனர். வைகை ஆற்றை யொட்டி இக்கிராமம் இருந்தாலும் கால்வாய் போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தினால் வைகை தண்ணீர் வராத நிலையில் கிணற்று தண்ணீரை கொண்டு விவசாயிகள் நெல் விவசாயம் செய்து வருகின்றனர்.
சில வருடங்களாக இப்பகுதியில் இரவில் காட்டுப்பன்றி தொல்லை அதிகமானதால் நெல் மகசூல் மிகவும் பாதிக்கப்பட்டு விவசாயிகள் கவலையில் உள்ள நிலையில் தற்போது பகல் நேரங்களில், பறவைகள் கூட்டம் நெற்பயிர்களை சேதப்படுத்துவதாலும் கவலை அடைந்து வருகின்றனர்.
முத்தனேந்தல் மற்றும் சுற்று வட்டார வயல்களில் பன்றிகள், பறவைகளால் ஏற்படும் பாதிப்பை தடுப்பதற்காக தற்போது வயலுக்குள் கயிறுகளை கட்டி கருப்பு பாலீதின் பைகளை தொங்க விட்டுள்ளோம். இதனால் பறவைகளின் வருகை ஓரளவுக்கு தடுக்கப்பட்டுள்ளது. இரவில் பன்றிகள் வயல்களுக்குள் நுழைவதை தடுக்க முடியாமல் மிகுந்த அவதிப்பட்டு வருகிறோம். - ராமு முத்தனேந்தல்

