/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நான்கு வழிச்சாலையில் தினமும் நடக்கும் விபத்து
/
நான்கு வழிச்சாலையில் தினமும் நடக்கும் விபத்து
ADDED : செப் 19, 2025 02:03 AM

காரைக்குடி:காரைக்குடி அருகேயுள்ள பாதரக்குடியில் நான்கு வழிச்சாலை பணி நடக்கிறது. எச்சரிக்கை பலகை, மின்விளக்கு, ஒளிரும் ஸ்டிக்கர் இல்லாததால் இரவு நேரங்களில் விபத்து நடந்து வருகிறது.
மேலுார் - காரைக்குடி வரையிலான 45 கி.மீ., தூரத்திற்கு, தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.659 கோடி மதிப்பீட்டில், நான்கு வழி சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில், 80க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய பாலங்களும், இரண்டு மேம்பாலமும் அமைக்கப்படுகிறது. பாதரக்குடியில் பாலம் அமைக்கும் பணி இரு வருடங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது.
பாதரக்குடி நுழைவு வாயிலில், உள்ள குறுகிய வளைவான சாலையை நெடுஞ்சாலை இணைக்கிறது. குறுகிய, வளைவான சாலை என்பதால், இரவு நேரத்தில் எதிரெதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை.
இதனால் வேகமாக நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் வளைவில் திரும்பும்போது விபத்து நேரிடுகிறது. ஆபத்து மிகுந்த இப்பகுதியில் மின்விளக்கோ , ஒளிரும் ஸ்டிக்கர்களோ, எச்சரிக்கை பலகைகளோ வைக்கப் படவில்லை.