தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/அனுமதி இல்லாத பட்டாசு கடைகள் மீது நடவடிக்கை

அனுமதி இல்லாத பட்டாசு கடைகள் மீது நடவடிக்கை

அனுமதி இல்லாத பட்டாசு கடைகள் மீது நடவடிக்கை


UPDATED : நவ 06, 2026 07:08 PM

ADDED : நவ 05, 2026 04:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:08 PM ADDED : நவ 05, 2026 04:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: மாவட்டத்தில் விதிமீறி, லைசென்ஸ் பெறாமல் இயங்கும் பட்டாசு கடைகளை கண்காணிக்க தாசில்தார் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ளன. பட்டாசு வியாபாரிகள் சிவகாசியில் இருந்து மொத்தமாக பட்டாசுகளை வாங்கி வந்து இங்கு விற்பனை செய்து வருகின்றனர். பட்டாசு கடை நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெற்றவர்கள் மட்டுமே பட்டாசு கடை நடத்த வேண்டும். 130 பேர் அனுமதிக்காக விண்ணப்பித்திருந்த நிலையில், 27 பேர்களுக்கு மட்டுமே தற்காலிக பட்டாசு கடை நடத்த அனுமதி வழங்கியுள்ளனர்.

இதில் பெரும்பாலான கடைகளுக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாதுகாப்பு கருதி அனுமதி தரக்கூடாது என தெரிவித்து விட்டார். ஆனால், மாவட்ட நிர்வாகம் அதையும் மீறி தற்காலிக பட்டாசு கடை நடத்த அனுமதி கோருவோரிடம் ரூ.100 பத்திரத்தில் விபத்து நேரிட்டால் தாங்களே பொறுப்பு என எழுதி வாங்கி பட்டாசு கடை நடத்த அனுமதி வழங்கியுள்ளனர். அனுமதிக்காக ஒவ்வொருவரிடமும் கொடிநாள் வசூல் நிதி வசூலிக்கப்படுகிறது.

மாவட்டத்தில் குறிப்பாக சிவகங்கை மட்டுமின்றி,காரைக்குடி,திருப்புத்துார்,தேவகோட்டை போன்று முக்கிய நகரங்களில் அனுமதி இன்றி புற்றீசல் போல் பட்டாசு கடைகள் நடத்தி வருகின்றனர். * பட்டாசு கடை கண்காணிக்க குழு: மாவட்ட வருவாய் அலுவலர் சைலேந்திரன் கூறியதாவது: ஒவ்வொரு தாலுகாவிற்கும் தாசில்தார், இன்ஸ்பெக்டர், தீயணைப்பு அலுவலரை கொண்ட குழு அமைத்து, அனுமதியுடன் இயங்கும் தற்காலிக பட்டாசு கடை முறையாக நடக்கிறதா, அனுமதியின்றி நடக்கும் பட்டாசு கடைகள் இருந்தால் அதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க குழு அமைத்துள்ளோம், என்றார். ///

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us