/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் போதை பொருள் தாராளம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
/
சிவகங்கையில் போதை பொருள் தாராளம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
சிவகங்கையில் போதை பொருள் தாராளம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
சிவகங்கையில் போதை பொருள் தாராளம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
ADDED : மார் 05, 2024 06:03 AM

சிவகங்கை : சிவகங்கையில் இரவில் கஞ்சா அமோகமாக விற்கப்படுவதாக அ.தி.மு.க.,எம்.எல்.ஏ., செந்தில்நாதன் குற்றம் சாட்டினார்.
சிவகங்கை கலெக்டர் அலுவலகம் எதிரே தி.மு.க.,அரசை கண்டித்தும் போதை பொருள் விற்பனைக்கு எதிராகவும் அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் பிரபு வரவேற்றார்.
மாணவரணி மாவட்ட செயலாளர் சுந்தரலிங்கம், மகளிர் அணி மாவட்ட செயலாளர் ஜாக்லின், ஜெ பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோவன், நகர செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் கருணாகரன், செல்வமணி, பழனிச்சாமி, சிவாஜி, அருள் ஸ்டீபன், கோபி, சேவியர் தாஸ், தகவல் தொழில் நுட்ப மாவட்ட செயலாளர் குழந்தை, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணைத்தலைவர் வக்கீல் ராஜா, இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட துணைச் செயலாளர் பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எம்.எல்.ஏ., செந்தில்நாதன் பேசுகையில், தி.மு.க., ஆட்சியில் தமிழகத்தில் போதை பொருட்கள் தாராளமாக புழங்குகிறது.
பள்ளி கல்லுாரிகளில் சாக்லேட்டாக, பிஸ்கட்டாக போதை பொருட்கள் விற்கப்படுகிறது. தி.மு.க., நிர்வாகிகள் கடத்தல் காரர்களுக்கும் கொள்ளைக்காரர்களுக்கும் உதவியாக இருக்கிறார்கள்.
போதை பொருட்களை காசாக்குவதில் தி.மு.க., வினர் கை தேர்ந்தவர்களாக உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மதுபான ஆலைகளை நடத்தக் கூடியவர்களே தி.மு.க., நிர்வாகிகள் தான்.
தமிழக இளைஞர்களை குடிக்கு அடிமையாக்குவது மட்டுமின்றி தற்போது போதை பொருட்களுக்கும் அடிமையாக்குகிறார்கள்.
இவற்றையெல்லாம் தமிழக போலீசார் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். சிவகங்கை நகரில் இரவு 8:00 மணிக்கு மேல் கஞ்சா தாராளமாக விற்கப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்கப்படுவதாக தகவல் அறிந்தால் உடனடியாக போலீசாருக்கு மாவட்ட நிர்வாகத்திற்கும் புகார் தெரிவிக்குமாறு நிர்வாகிகளை கேட்டுக்கொண்டார்.

