/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை அருகே காட்டுப் பன்றியால் விவசாயம் பாதிப்பு
/
சிவகங்கை அருகே காட்டுப் பன்றியால் விவசாயம் பாதிப்பு
சிவகங்கை அருகே காட்டுப் பன்றியால் விவசாயம் பாதிப்பு
சிவகங்கை அருகே காட்டுப் பன்றியால் விவசாயம் பாதிப்பு
ADDED : அக் 23, 2024 06:17 AM
சிவகங்கை : சிவகங்கை அருகே மேலகண்டனி, வேம்பத்துார், பெரியகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் காட்டுப் பன்றிகளால் விவசாய பயிர் சேதம் அடைவதாகவும் அவற்றை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் மேலகண்டனி, பெரியகோட்டை, வேம்பத்துார், பச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் வாழை உள்ளிட்ட நெற்பயிரை விவசாயம் செய்து வருகின்றனர். இந்த பகுதியில் பன்றிகளின் தொல்லை அதிகமாக உள்ளதாகவும், இரவு நேரங்களில் வாழை உட்பட பல்வேறு விவசாய பயிர்களை நாசம் செய்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் பழையனுார், கீழடி, கொந்தகை, திருப்பாச்சேத்தி, தெ.புதுக்கோட்டை, கல்லுாரணி, வீரவலசை, கோவானுார் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் காட்டுப் பன்றிகள் நடமாட்டம் அதிகம் உள்ளது.
பகலில் கண்மாய்களில் உள்ள கருவேல மரங்களுக்குள் இருக்கும் பன்றிகள் இரவில் கூட்டம் கூட்டமாக சென்று நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட விவசாய பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதனால் விவசாயிகள் விவசாயத்தை கைவிடும் சூழல் உள்ளது. இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என தெரிவிக்கின்றனர்.
மேலக்கண்டனி விவசாயி ஏ.கே.ஆர்.கருப்பையா கூறுகையில், நான் 50 ஏக்கரில் மரவள்ளி கிழங்கு, வெள்ளை பூசணி விவசாயம் செய்து வருகிறேன். இரவு நேரத்தில் பன்றிகள் கூட்டமாக வந்து அனைத்தையும் சேதப்படுத்தி மரவள்ளி கிழங்குகளை பறித்து தின்று விடுகிறது. விவசாயமே செய்ய முடியாத சூழல் உள்ளது. இது குறித்து கலெக்டரிடம் பலமுறை மனு கொடுத்து விட்டோம்.
பன்றியை பிடிக்க எந்த நடவடிக்கையும் இல்லை. பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தாவிட்டால் இந்தபகுதியில் உள்ள விவசாயிகள் அனைவரும் விவசாயத்தை கைவிடும் நிலையில் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் விவசாயத்தை அழிக்கும் காட்டுபன்றிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.