
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை உழவரைத் தேடி வேளாண் முகாம் நடைபெறுகிறது.
இன்று தேவகோட்டை வட்டாரத்தில் செலுகை, செலுவத்தி, தாளனேந்தல் கிராமத்திலும், இளையான்குடி வட்டாரத்தில் இளமனுார், திருவள்ளூர் கிராமத்திலும், காளையார்கோவில் வட்டாரத்தில் கவுரிபட்டி, மங்காநந்தல், முடிக்கரை, பிரண்டைகுளம், புரசடிஉடைப்பு, வாணியங்குடி கிராமத்திலும், கல்லல் வட்டாரத்தில் பணங்குடி, பட்டமங்கலம் மேற்கு கிராமத்திலும், கண்ணங்குடி வட்டாரத்தில் களத்துார், மாடக்கோட்டை கிராமத்திலும், மானாமதுரை வட்டாரத்தில் அரசனேந்தல், வேதியரேந்தல் கிராமத்திலும், சாக்கோட்டை வட்டாரத்தில் ஆம்பக்குடி, காரைக்குடி கிராமத்திலும், சிங்கம்புணரி வட்டாரத்தில் மல்லாக்கோட்டை, மாம்பட்டி கிராமத்திலும், சிவகங்கை வட்டாரத்தில் அழகிச்சிபட்டி, பனையூர் கிராமத்திலும், திருப்புத்துார் வட்டாரத்தில் பையூர், சுலன்குடி கிராமத்திலும், திருப்புவனம் வட்டாரத்தில் ஏனாதி, தேளி கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை முகாம் நடைபெறுகிறது.
இதில் வேளாண் மற்றும் பிறத்துறை அலுவலர்கள் தங்கள் துறை சார்ந்த திட்டங்களை விளக்குவார்கள்.
விவசாயிகள் திட்டங்களை தெரிந்து கொள்வதோடு தங்களுக்கு தேவையான திட்டங்கள் தொடர்பான மனுக்களை அளிக்கலாம் என சிவகங்கை வேளாண்மை இணை இயக்குநர் சுந்தரமகாலிங்கம் தெரிவித்தார்.

