/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் அ.தி.மு.க., கவுன்சிலர் அதிருப்தி
/
கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் அ.தி.மு.க., கவுன்சிலர் அதிருப்தி
கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் அ.தி.மு.க., கவுன்சிலர் அதிருப்தி
கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் அ.தி.மு.க., கவுன்சிலர் அதிருப்தி
ADDED : ஜூன் 25, 2025 03:10 AM
இளையான்குடி : இளையான்குடியில் பேரூராட்சி கூட்டத்திற்கு அனைத்து துறை அரசு அதிகாரிகளும் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இளையான்குடி பேரூராட்சி கூட்டம் தலைவர் நஜூமுதீன் தலைமையில் நடந்தது. துணை தலைவர் இப்ராஹிம் முன்னிலை வகித்தார்.
துாய்மை ஆய்வாளர் தங்கதுரை வரவு,செலவு கணக்குகள் மற்றும் தீர்மானங்களை வாசித்தார்.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., கவுன்சிலர் நாகூர் மீரா: பேரூராட்சி கூட்டத்தில் அனைத்து அரசு அதிகாரிகளும் பங்கேற்க நடவடிக்கை எடுத்தால் கவுன்சிலர்கள் கூறும் குறைகளை நிவர்த்தி செய்ய ஏதுவாக இருக்கும்.பழைய எம்.எல்.ஏ அலுவலக கட்டட வளாகத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அல் அமீன், காங்., கவுன்சிலர்: ரசூலாசமுத்திரத்தில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தில் தண்ணீர் வசதி இல்லாத காரணத்தினால் போர்வெல் அமைக்கும் வரை தற்காலிகமாக குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜவேலு, சுயேச்சை கவுன்சிலர்: பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வெறிச்சோடி கிடக்கும் புதிய பஸ் ஸ்டாண்டிற்கு அனைத்து பஸ்களும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேரூராட்சி தலைவர் நஜூமுதீன்: கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
கூட்டத்தில் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.