/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அஜித்குமார் கொலை: சி.பி.ஐ., 2 வது நாளாக விசாரணை
/
அஜித்குமார் கொலை: சி.பி.ஐ., 2 வது நாளாக விசாரணை
ADDED : ஜூலை 16, 2025 02:28 AM
திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் தனியார் நிறுவன காவலாளி அஜித்குமார் 29, கொலை வழக்கில் சி.பி.ஐ., அதிகாரிகள் 2வது நாளாக திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை மேற்கொண்டனர்.
இவ்வழக்கு தொடர்பாக நேற்று முன் தினம் டி.எஸ்.பி., மோஹித்குமார் தலைமையிலான 5 பேர் கொண்ட சி.பி.ஐ., குழுவினர் மடப்புரம் கோயில், உதவி ஆணையர் அலுவலகம், கோசாலை, கார் பார்க்கிங் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். நேற்று மாலை 5:00 மணிக்கு இரு சி.பி.ஐ., அதிகாரிகள் திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை நடத்தினர். இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் மற்றும் போலீசாரிடம் விசாரணை நடந்தது. ஆக., 20க்குள் விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும் என்பதால் சி.பி.ஐ., குழுவினர் தனித்தனியாக பிரிந்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.
போலீசார் காவல் நீடிப்பு
அஜித்குமார் கொலை வழக்கில் தனிப்படை போலீசார் கண்ணன் 47, ராஜா 36, ஆனந்த் 38, சங்கரமணிகண்டன் 36, பிரபு 42, ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
15 நாள் நீதிமன்ற காவல் முடிந்ததையடுத்து நேற்று காணொலி காட்சி மூலம் திருப்புவனம் நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களது காவலை ஜூலை 30 வரை காவல் நீட்டிப்பு செய்து நீதிபதி உத்தரவிட்டார்.