/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் இன்று அம்மன் ரதம்
/
திருப்புத்துாரில் இன்று அம்மன் ரதம்
ADDED : ஏப் 26, 2025 06:23 AM
திருப்புத்துார் : திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப்பெருவிழாவை முன்னிட்டு இன்று அம்மன் ரதத்தில் பவனியும், நாளை தெப்பவிழாவும் நடைபெறுகிறது.
இக்கோயிலில் ஏப்.17ல் பூச்சொரிதல் விழா நடந்தது. மறுநாள் மாலை கொடியேற்றி காப்புக்கட்டி வசந்தப் பெருவிழா துவங்கியது. தொடர்ந்து தினசரிஇரவில் சர்வ அலங்காரத்தில் அம்பாள் எழுந்தருளி திருக்குளம் வலம் வருகிறார்.
மூன்றாம் நாளில் பொங்கல் விழாவும், ஏப்.22ல் பால்குட விழாவும் நடந்தது. தொடர்ந்து நகரின் பல பகுதிகளில்இருந்தும் பக்தர்கள் பூத்தட்டு எடுத்து அம்மனை தரிசித்து வருகின்றனர்.
இன்று மாலை 6:30 மணிக்கு அம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடைபெறும். பின்னர் ரதத்தில் எழுந்தருளி அம்மன் ரத ஊர்வலம் நடைபெறும். நாளை காலை கோயில் குளத்தில் தீர்த்தவாரி மஞ்சள் நீராட்டும், இரவில் அம்மன் தெப்பம் எழுந்தருளி வலம் வருதலும், பக்தர்கள் குளத்தைச் சுற்றி விளக்கேற்றி வழிபாடும் நடைபெறும்.