/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் அம்ரூத் திட்ட பணிகள் மெத்தனம்
/
காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் அம்ரூத் திட்ட பணிகள் மெத்தனம்
காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் அம்ரூத் திட்ட பணிகள் மெத்தனம்
காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் அம்ரூத் திட்ட பணிகள் மெத்தனம்
ADDED : மே 14, 2025 01:00 AM
காரைக்குடி,: காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் அம்ரூத் 2 திட்டத்தில் நடக்கும் பணிகள் எப்போது முடிவுக்கு வரும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
காரைக்குடி வழியே 30க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. பழமையான இந்த ரயில்வே ஸ்டேஷன், பல்வேறு அம்சங்களுடனும், வசதிகளுடனும் கூடிய ரயில்வே ஸ்டேஷனாக மாற்றும் விதமாக அம்ரூத் திட்டத்தில் ரூ.13.57 கோடியில் 2023ஆம் ஆண்டு புதுப்பிப்பு பணிகள் தொடங்கின.
இந்த நிதியில் நகரும் படிக்கட்டு, லிப்ட் வசதி, வாகன நிறுத்துமிடம், நவீன மின்விளக்குகள், ரயில்வே ஸ்டேஷனின் அலங்கார நுழைவு வாயில், பயணிகள் அமர கூடுதல் இடம், நெடுந்துார ரயில்களின் பெட்டிகளில் டிஜிட்டல் போர்டுகள், கண்காணிப்பு கேமராக்கள், பயணிகள் தங்கும் விடுதிகள் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் 2024 மார்ச் மாதத்திற்குள் முடிவடையும் என தெரிவித்தனர்.
ஆனால், எஸ்கலேட்டர் அமைக்கும் பணிகள் இன்னும் துவக்கப்படவில்லை. இது போன்று ஏராளமான பணிகள் நடைபெறாமல் இழுபறிநிலை நீடிக்கிறது. இதனால், எப்போதுமுழுமையான பணிகள் முடிந்து பயணிகளின் பயன்பாட்டிற்கு வரும் என எதிர் பார்க்கின்றனர்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது, இப்பணிகள் செப்.,ல் முடிவுக்கு வரும், என்றனர்.