/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
சிவகங்கையில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 23, 2025 04:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மாவட்ட தலைவர் ஜெயமங்கலம் தலைமை வகித்தார். பொருளாளர் லட்சுமி முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் பாக்கியமேரி சிறப்புரை ஆற்றினார். சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் உமாநாத், துணை தலைவர் வேங்கையா, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிர்வாகிகள் சித்ரா, கவுசல்யா, தமிழ்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.