/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை ஆட்டோ டிரைவர் கொலையில் மேலும் ஒருவர் கைது
/
சிவகங்கை ஆட்டோ டிரைவர் கொலையில் மேலும் ஒருவர் கைது
சிவகங்கை ஆட்டோ டிரைவர் கொலையில் மேலும் ஒருவர் கைது
சிவகங்கை ஆட்டோ டிரைவர் கொலையில் மேலும் ஒருவர் கைது
ADDED : டிச 09, 2024 05:18 AM
சிவகங்கை: சிவகங்கையில் தீபாவளியன்று கீழவாணியங்குடியில் நடந்த ஆட்டோ டிரைவர் கொலையில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை அருகே வாணியங்குடி ஆட்டோ டிரைவர் மணிகண்டன் 40. இவர் உட்பட அருண்குமார் 26, ஆதிராஜா 50 ஆகியோர் தீபாவளியன்று மாலை 5:00 மணிக்கு கீழவாணியங்குடி கண்மாய் கரையில் அமர்ந்திருந்தனர். அப்போது டூவீலரில் வந்த கும்பல் அவர்களை வெட்டிவிட்டு தப்பியது.
இதில், ஆட்டோ டிரைவர் மணிகண்டன் பலியானார். மற்ற இருவரும் காயமுற்றனர். ஆட்டோ டிரைவர் கொலையில் ஈடுபட்டதாக ஏற்கனவே 11 பேர்களை போலீசார் கைது செய்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று இக்கொலையில் தொடர்புடைய சிவகங்கை வேலாயுதசுவாமி கோயில் தெரு பால்பாண்டி மகன் சுகுமார் 21, என்பவரை கைது செய்தனர்.