/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பம்
/
கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பம்
ADDED : டிச 13, 2025 05:35 AM
சிவகங்கை: வரும் ஆண்டிற்கான கபீர் புரஸ்கார் விருது பெற தகுதியுள்ள நபர்கள் டிச., 15 க்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான கபீர் புரஸ்கார் விருது ஆண்டு தோறும் குடியரசு தினத்தன்று வழங்கப்படும். தமிழகத்தில் வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களும் சமுதாய நல்லிணக்காக இந்த விருது வழங்கப்படும். இந்த விருது குடியரசு தினத்தன்று வழங்கப்படும்.
இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://award.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பித்து அதன் விபரங்களை டிச., 15 ம் தேதிக்குள் சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும் என்றார்.

