/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மணிமேகலை விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
/
மணிமேகலை விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு
ADDED : ஏப் 16, 2025 08:51 AM
சிவகங்கை, : கிராம, நகர சமுதாய அமைப்பினர் மணிமேகலை விருது பெற ஏப்., 25 க்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் சுயஉதவி குழு, ஊராட்சி, வட்டார அளவிலான கூட்டமைப்பு, வறுமை ஒழிப்பு சங்கம், நகர் அளவிலான கூட்டமைப்பில் சிறந்து விளங்கும் அமைப்புகளுக்கு அரசு மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருது பெற அந்தந்த வட்டார இயக்க மேலாண்மை யூனிட், நகர்புற சமுதாய அமைப்புகள் மாவட்ட இயக்க மேலாண்மை யூனிட்டில் ஏப்., 25 க்குள் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.
மேலும் விபரத்திற்கு திட்ட இயக்குனர், மாவட்ட இயக்க மேலாண்மை யூனிட், ஊரக வாழ்வாதார இயக்கம், சிவகங்கையில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம், என்றார்.

