ADDED : அக் 31, 2025 11:28 PM
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை உடற்கல்வியியல் கல்லுாரியில் மாவட்ட அளவிலான, 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஹாக்கி போட்டி நடந்தது. இதில் பல்வேறு, பள்ளிகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இதில் அழகப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.
அணியினரை அழகப்பா கல்வி குழும தாளாளர் வைரவன் ராமநாதன் பாராட்டினார்.
திருப்புத்துார்: சிவகங்கை வருவாய் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையேயான குழு விளையாட்டுப் போட்டி காரைக்குடி அழகப்பா உடற்கல்வியியல் கல்லுாரியில் நடந்தது. 19 வயதிற்குட்பட்ட கைப்பந்தில் எஸ்.எம்.எஸ். பள்ளி மாணவர்கள் முதலிடத்தை வென்று மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்று அடுத்த மாதம் திருவண்ணாமலையில் நடைபெற இருக்கும் பாரதியார் தின குழு விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
மேலும் 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் கைப்பந்து பிரிவில் இரண்டாம் இடத்தை பெற்றனர்.
மாணவிகள் 19 வயதுக்குட்பட்ட கோகோ போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றனர்.
வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனை, உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோரை பள்ளி நிர்வாக குழுத்தலைவர் வெள்ளையன், செயலர் வெங்கடாசலம்,பொருளாளர் அம்மையப்பன், தலைமை ஆசிரியை கமலம் பாராட்டினர்.

