/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அறிவியல் இயக்கம் சார்பில் துளிர் திறனறிதல் தேர்வு
/
அறிவியல் இயக்கம் சார்பில் துளிர் திறனறிதல் தேர்வு
ADDED : மார் 17, 2024 11:51 PM
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 1500 மாணவர்கள் பங்கேற்ற துளிர் திறனறிதல் தேர்வு நடந்தது.
அறிவியல், கணிதம், மற்றும் பொது அறிவை வளர்க்கும் விதமாகவும் பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தில் அறிவியல் அறிவையும், மனப்பான்மையையும், சிந்தனையும் வளர்த்துக் கொள்ள இந்த போட்டித் தேர்வுகள் ஆண்டுதோறும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடத்தப்படுகிறது.
மாவட்டத்தில் காளையார்கோவில், கல்லல், சாக்கோட்டை, தேவகோட்டை, சிங்கம்புணரி, திருப்புத்துார், சிவகங்கை ஆகிய ஒன்றியங்களில் உள்ள மாணவர்கள் பள்ளிகளில் தேர்வு எழுதினர்.
மாவட்ட பொருளாளர் பிரபு, மாவட்ட துணைத் தலைவர் பாபா அமீர் பாதுஷா, மாநில நிர்வாக குழு உறுப்பினர் ஜீவானந்தம், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆரோக்கியமேரி, கிளை தலைவர்கள் மணவாளன், வீரபாண்டி, செந்தில்குமார், ஸ்டாலின் ஆகியோர் தேர்வை ஒருங்கிணைத்தனர்.
தேர்வு ஏற்பாட்டை அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி செய்தார். தேர்வில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டு சான்று வழங்கப்பட்டது.
மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவில் அறிவியல் சுற்றுலாவிற்கு அழைத்து செல்லப்படுவார்கள்.

