/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நவீன தொழில்நுட்பம் குறித்து அறிய தொல்லியல் அதிகாரிகள் எகிப்து பயணம்
/
நவீன தொழில்நுட்பம் குறித்து அறிய தொல்லியல் அதிகாரிகள் எகிப்து பயணம்
நவீன தொழில்நுட்பம் குறித்து அறிய தொல்லியல் அதிகாரிகள் எகிப்து பயணம்
நவீன தொழில்நுட்பம் குறித்து அறிய தொல்லியல் அதிகாரிகள் எகிப்து பயணம்
ADDED : நவ 20, 2025 04:05 AM
கீழடி: கீழடியில் திறந்த வெளி அருங்காட்சியக பணிகள் நடந்து வரும் நிலையில் கூடுதல் தொழில்நுட்பம் குறித்து அறிய தமிழக தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம், கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ் இருவரும் எகிப்து நாட்டிற்கு சென்றுள்ளனர்.
கடந்த ஜனவரி முதல் 17 கோடியே 80லட்ச ரூபாய் செலவில் 67 ஆயிரத்து 343 சதுர அடி பரப்பளவில் திறந்த வெளி அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் தொடங்கின. கீழடியில் மத்திய, மாநில தொல்லியல் துறை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் திறந்த வெளி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளன. தமிழகத்தின் முதல் திறந்த வெளி அருங்காட்சியகம் என்பதால் அதில் நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்க தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே திறந்த வெளி அருங்காட்சியகம் அமைக்க ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாட்டிற்கு தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள் சிவானந்தம், ரமேஷ், அஜய்குமார் ஆகியோர் சென்று வந்த நிலையில் தற்போது இணை இயக்குனர் சிவானந்தம், கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ் இருவர் ஒரு மாத பயணமாக எகிப்து சென்றுள்ளனர். அங்கு 20 வருடங்களாக கட்டப்பட்ட திறந்தநிலை அருங்காட்சியகத்தையும், அதில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் குறித்தும் ஆய்வு செய்ய உள்ளனர்.
கொந்தகையில் முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்ட நிலையில் எகிப்தில் உள்ள பிரமிடுகள் குறித்தும் ஆய்வு செய்ய உள்ளனர். ஜனவரியில் திறந்த வெளி அருங்காட்சியகம் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் புதுப்புது தொழில் நுட்பங்கள் குறித்து அறிய தொல்லியல் துறை அதிகாரிகள் அடுத்தடுத்து வெளிநாடுகளுக்கு சென்று வருவது வரவேற்பை பெற்றுள்ளது.

