ADDED : நவ 20, 2025 04:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழடி: உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு கீழடி அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான ஓவிய போட்டிகள் நடக்க உள்ளன. கீழடியில் 2023ல் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. தினசரி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கீழடி வந்து செல்கின்றனர். நவம்பர் 19 முதல் 25 வரை உலக பாரம்பரிய வாரமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இதனை ஒட்டி கீழடி அருங்காட்சியகத்தில் திருப்புவனம் தாலுகாவைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான ஓவியம் மற்றும் கட்டுரை போட்டி நாளை நடத்தப்பட உள்ளன. திருப்புவனம் தாலுகாவைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியர்கள் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு நவ., 25ம் தேதி பரிசு வழங்கப்பட உள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

