/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் மனநலம் பாதித்த பெண் மீது தாக்குதல்
/
மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் மனநலம் பாதித்த பெண் மீது தாக்குதல்
மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் மனநலம் பாதித்த பெண் மீது தாக்குதல்
மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் மனநலம் பாதித்த பெண் மீது தாக்குதல்
ADDED : அக் 22, 2024 06:55 AM

சிவகங்கை: சிவகங்கை மாற்றுத்திறனாளி இல்லத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை அடித்து தாக்கி துன்புறுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.
சிவகங்கையில் பனங்காடி ரோட்டில் உள்ளது தாய் இல்லம். இந்த இல்லம் தமிழ்நாடு மாற்று திறனாளிகள் நல வாரிய உறுப்பினரான புஷ்பராஜ் என்ற தவழும் மாற்றுத் திறனாளியால் நடத்தப்படும் அறக்கட்டளையின் கீழ் இயங்கி வருகிறது. இங்கு 35 மாற்று திறனாளிகள் தங்கி சுய சுயதொழில் செய்து வருகின்றனர். இதன் மூலம் கிடைக்கும் வருவாய் மூலம் தங்களின் வாழ்வாதாரத்தை நடத்துகின்றனர். இந்த தாய் இல்லத்தில் தவழும் மாற்று திறனாளிகள் மட்டுமே தங்க அனுமதி பெற்ற நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளிகளும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த இல்லத்தில் பயிற்றுனராக உள்ள கோமதி என்கிற மாற்று திறனாளி பெண் மனநலம் பாதிக்கப்பட்ட சுதா என்கிற மாற்று திறனாளி பெண்ணை கம்பால் தாக்கி திட்டும் வீடியோ பரவி வருகிறது. இந்த வீடியோவை அங்கு தங்கியிருந்த மாற்று திறனாளி இளைஞரான திருவருட்செல்வன் என்பவரே எடுத்து வலை தளங்களில் பரப்பியதுடன் அங்கு மாற்று திறனாளிகளையும், மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுதிறனாளிகளையும் அடித்து துன்புறுத்துவதுடன் ஆடு, கோழிகளை மேய்க்க கூறி கட்டாயப்படுத்துவதாக கூறி பதிவிட்டுள்ளார்.
இது குறித்து இல்ல பொறுப்பாளர் புஷ்பராஜ் கூறியது: மனநலம் பாதிக்கப்பட்ட அந்த பெண் உடையிலேயே இயற்கை உபாதைகளை கழித்ததால் பயிற்சியாளர் கண்டித்துள்ளார். அது நடந்த நேரத்தில் நான் இல்லை. பிறகு தான் எனக்கு தெரியவந்தது. பயிற்சியாளரும் ஒரு மாற்றுத்திறனாளி தான் அவரை கண்டித்து விட்டேன்.
இந்த வீடியோ வெளியிட்ட இளைஞர் இங்கு தங்கி தான் அரசு தேர்வுக்கு படித்து வந்தார். அவர் இங்கு தங்கியுள்ள மற்ற பெண் மாற்று திறனாளிகளை வேலை வாங்கியுள்ளார். அதை பயிற்சியாளர் கோமதி கண்டித்துள்ளார். நானும் திருவருட்செல்வனை கண்டித்தேன். ஆகையால் ஏற்கனவே எடுத்து வைத்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார் என்றார்.
சம்பவம் குறித்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர் கூறியதாவது: இங்கு கை,கால் பாதிக்கப்பட்டோர் மட்டுமே தங்க வேண்டும். ஆனால், மனநலம் பாதிக்கப்பட்டோரையும் தங்க வைத்திருந்தனர். அவர்கள் 9 பேரை சுந்தரநடப்பு, தேவகோட்டையில் உள்ள மனநல காப்பகங்களுக்கு மாற்றியுள்ளோம் என்றார்.