ADDED : ஜூன் 21, 2025 11:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள அரசு உதவி பெறும் தனியார் தமிழ் கல்லுாரியில் முத்துமாரி என்ற பெண் உதவியாளராக பணி செய்கிறார்.
நேற்று முன்தினம் மாலை இவரும், மற்றொரு பணியாளரும் கல்லுாரியில் இருந்தபோது செக்யூரிட்டி பழனியப்பன் கல்லுாரி கேட்டை பூட்டி சென்றார்.
முத்துமாரி கூறுகையில்: கல்லுாரியில் வேலை இருந்தது. அலுவலக உதவியாளர் ராமசாமி மெயில் அனுப்பிக்கொண்டிருந்தார். நான் வெளியே அமர்ந்திருந்தேன். அப்போது செக்யூரிட்டி பழனியப்பன் கல்லுாரி வெளிப்புற கேட்டை பூட்டி சென்று விட்டார். கல்லுாரி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு தெரிவித்தோம். அதனைத் தொடர்ந்து பழனியப்பன் கேட்டை திறந்தார். இதுகுறித்து கேட்டபோது பழனியப்பன் கேட்டின் பூட்டை வைத்து, மண்டையை உடைத்தார். அழகப்பாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.