ADDED : ஜன 26, 2024 05:28 AM
சிவகங்கை: சிவகங்கை அருகே உள்ள காஞ்சிரங்கால் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் 56. இவர் வி.சி.க., கட்சியின் மாவட்ட பொருளாளராக உள்ளார். இவர் நேற்று காஞ்சிரங்கால் ஊராட்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
மாவட்ட தி.மு.க., துணை செயலாளரும், ஊராட்சி தலைவருமான மணிமுத்து மற்றும் சுகுமாரன் உள்ளிட்ட சிலர் அங்கு இருந்துள்ளனர். அவர்களிடம் பாஸ்கர் தனது வீட்டிற்கு வீட்டு வரி ரசீது கேட்டுள்ளார்.
அதில் பாஸ்கருக்கும் மணிமுத்துவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மணிமுத்து மற்றும் உடன் இருந்தவர்கள் தன்னை தாக்கியதாக கூறி பாஸ்கர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிவகங்கை போலீசார் விசாரிக்கின்றனர்.
ஊராட்சி தலைவர் மணிமுத்து கூறுகையில், என்ன நடந்தது என்று ஊராட்சி அலுவலக பணியாளரிடம் கேளுங்கள். அப்படி எதுவும் இங்கு நடக்கவில்லை என்றார்.

