/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காலை முதல் மதியம் வரை வெயிலில் செல்வதை தவிருங்கள்
/
காலை முதல் மதியம் வரை வெயிலில் செல்வதை தவிருங்கள்
ADDED : ஏப் 22, 2025 06:10 AM
சிவகங்கை: மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெப்ப அலை அதிகரிப்பதால் காலை 11:00 முதல் மதியம் 3:00 மணி வரை வெயிலில் செல்வதை தவிருங்கள் என தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் அறிவுறுத்துகின்றனர்.
அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி கூறியதாவது:
கடுமையான இந்த வெப்பஅலை தமிழகத்தைபாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அதிக வெப்பநிலை உயிருக்கு ஆபத்தானதாக இருக்கலாம். வயதான பெரியவர்கள், சிறு குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், சர்க்கரை மற்றும் ரத்த கொதிப்பு பாதிப்பு உள்ள மக்களுக்கு இந்த வெப்ப நிலை அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
மனித வாழ்க்கைக்கு வெப்பநிலை வரம்பு 60சதவீதம் ஈரப்பதத்துடன்20 முதல் 30 டிகிரி செல்சியஸ் தேவைப்படுகிறது. இருப்பினும் தமிழகத்தில்பல பகுதிகளில் இந்த வரம்பு தொடர்ந்து உயர்ந்து காணப்படுகிறது. ஆகையால் தண்ணீர் மற்றும் எலக்ரோலைட் உப்பு சர்க்கரை நிறைந்த திரவங்களை குடிப்பதன் மூலம் நீர் சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
பகல் நேர வெப்பமான காலை 11:00 முதல் மதியம் 3:00 மணி வரை வீட்டிற்கு வெளியில் செல்வதை தவிருங்கள். முடிந்த வரை வீட்டிற்குள்இருங்கள். இலகுரக தளர்வான பொருத்தமான வெண்மை நிற ஆடைகளை அணியுங்கள். வெயிலில் செல்லும் போது கையில் குடையினை எடுத்துச் செல்ல வேண்டும்.
தர்பூசணி வெள்ளரிக்காய் போன்ற நீரேற்றம்தரும் உணவுகளை உண்ணுங்கள். நிறுத்தப்பட்ட வாகனத்தில் குழந்தைகள் அல்லது செல்லப் பிராணிகளை ஒருபோதும் தனியாக விடாதீர்கள்.
ஒரு நாளைக்கு ஆண்கள்2.6 லிட்டர் முதல் 3.7 லிட்டர் தண்ணீரும், பெண்கள் 2.1 லிட்டர் முதல் 2.7 லிட்டர் தண்ணீரும், குழந்தைகள் 1 முதல் 2 லிட்டர் தண்ணீரும், கர்ப்பிணி பெண்கள் 2.3 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் அருந்த வேண்டும் என்றார்.