ADDED : டிச 11, 2024 07:03 AM

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் ஏற்றுமதி விழிப்புணர்வு கருத்தரங்கு சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடந்தது.
வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) தமிழ்ச்செல்வி வரவேற்றார். ஏற்றுமதி மேம்பாட்டு மைய தலைவர் ராஜமூர்த்தி பேசினார்.
அரசு நிதி உதவிகள் மற்றும் திட்டங்கள் பற்றி மாவட்ட தொழில் மைய துணை இயக்குனர் கண்ணன், எம்.எஸ்.எம்.இ., உதவி இயக்குனர் உமா சந்திரிகா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பிரவீன் குமார், ஸ்பைசஸ் போர்டு மேலாளர் மோகன், தமிழ்நாடு ஸ்டார்ட் அப் ஆலோசகர் சரண்யா, ஏற்றுமதியாளர்கள் முத்து, ராமகிருஷ்ணன் நரேஷ் ராம், சிவசங்கர் ஆகியோர் ஏற்றுமதி குறித்து பேசினர். பல்வேறு நிறுவனங்கள் சார்பில் தயாரிக்கப்பட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
ஏற்பாடுகளை சிவகங்கை தென்னை உற்பத்தியாளர் நிறுவனம், ஆவுடைய விநாயகர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், கற்பக விநாயகர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், ஏற்றுமதி மேம்பாட்டு மையம் மற்றும் வேளாண்மை அலுவலர்கள் செய்திருந்தனர்.