ADDED : நவ 01, 2026 02:56 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்கில் லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என்பது குறித்து விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.
போட்டியில் கலந்து கொண்டவர்கள் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். டி.எஸ்.பி., தங்கராமன் போட்டியை தொடங்கி வைத்தார்.இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், ஜேசுதாஸ் உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டனர்.
