ADDED : ஜூன் 02, 2025 12:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: மாவட்ட சைக்கிள் அசோசியேஷன் சார்பில் உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு காரைக்குடியில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மாவட்ட தலைவர் கோபால் வரவேற்றார்.
தமிழகமக்கள் மன்ற தலைவர் ராஜ்குமார் வாழ்த்துரை வழங்கினார். பயிற்சியாளர் நாகராஜ் முன்னிலை வகித்தார். மாங்குடி எம்.எல்.ஏ., ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
நகர் நல அலுவலர் வினோத், தொழில் வணிக கழக செயலாளர் கண்ணப்பன் பங்கேற்றனர். கல்லுாரி ரோடு, செக்காலை ரோடு வழியாக ஊர்வலம் சென்றது.