/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் மழையால் பீர்க்கங்காய் சாகுபடி பாதிப்பு
/
திருப்புவனத்தில் மழையால் பீர்க்கங்காய் சாகுபடி பாதிப்பு
திருப்புவனத்தில் மழையால் பீர்க்கங்காய் சாகுபடி பாதிப்பு
திருப்புவனத்தில் மழையால் பீர்க்கங்காய் சாகுபடி பாதிப்பு
ADDED : அக் 23, 2024 06:12 AM

திருப்புவனம், : திருப்புவனம் வட்டாரத்தில் மழை காரணமாக பீர்க்கங்காய் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது திருப்புவனம் வட்டாரத்தில் கலியாந்துார், சொக்கநாதிருப்பு, ஏனாதி உள்ளிட்ட பகுதிகளில் கத்தரி, வெண்டை, பீர்க்கங்காய், புடலங்காய் உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகின்றன.
கிராமங்களில் வீடுகள், தோட்டங்களில் வளர்க்கப்படும் காய்கறிகளை தற்போது விவசாயிகள் பெருமளவு பயிரிடுகின்றனர். நாட்டு காய்கறிகளான பீர்க்கங்காய், புடலை, கத்தரி, வெண்டை உள்ளிட்டவற்றிற்கு குறைந்த அளவு தண்ணீர் தேவை, தினசரி வருவாய் கிடைக்கும் என்பதால் ஏனாதி பகுதியில் சில விவசாயிகள் பீர்க்கங்காய் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
ஏக்கருக்கு பத்தாயிரம் ரூபாய் வரை செலவு செய்து கற்கள் நட்டு அதில் இரும்பு கம்பிகள் மூலம் பந்தல் அமைத்து பயிரிடுகின்றனர். ஹைபிரிட் வகை பீர்க்கை விதைகளையே நடவு செய்கின்றனர். நடவு செய்த 60 நாட்களில் பீர்க்கங்காய் அறுவடை செய்யலாம், வாரத்திற்கு இருமுறை 80 கிலோ வரை அறுவடை செய்கின்றனர்.
தற்போது கிலோ 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை பீர்க்கங்காய் விற்பனை செய்யப்படுகிறது. மழை காரணமாக பீர்க்கங்காய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வாரத்திற்கு 80கிலோ பறித்த நிலையில் தற்போது 10 கிலோ கூட கிடைக்கவில்லை என விவசாயிகள் புலம்புகின்றனர்.
விவசாயி வேல்முருகன் கூறுகையில்: நாட்டு காய்கறிகளுக்கு தற்போது ஓரளவுக்கு வரவேற்பு உள்ளது. அதிலும் ஹைபிரிட் வகைகளேயே விரும்புகின்றனர்.
நாட்டு பீர்க்கங்காய் வருடம் முழுவதும் பலன் கொடுக்கும், ஹைபிரிட் வகை பயிரிட்ட 60 நாட்களில் இருந்து அடுத்து இரு மாதங்கள் வரையே பறிக்கலாம் அதன்பின் மீண்டும் நடவு செய்ய வேண்டும், என்றார்.
அரசு மற்றும் தனியாரிடம் விதைகள் வாங்கினாலும் அவைகள் முளைப்புத்திறன் கொண்டவை என நம்ப முடியவில்லை. விளைச்சலுக்கு வந்தால் தான் லாபம் இல்லையென்றால் கடும் நஷ்டம்தான் என புலம்புகின்றனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் பீர்க்கங்காய் செடிகள் அழுக தொடங்கியுள்ளன. எனவே செடிகளை அழித்து விட்டு மீண்டும் நடவு செய்ய வேண்டும் என விவசாயிகள் புலம்புகின்றனர்.

