/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பள்ளி மாணவர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கிய பா.ஜ.,
/
பள்ளி மாணவர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கிய பா.ஜ.,
பள்ளி மாணவர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கிய பா.ஜ.,
பள்ளி மாணவர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கிய பா.ஜ.,
ADDED : ஜூலை 05, 2025 12:46 AM
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்த அஸ்விந்த் 7, என்ற மாணவர் ஜூன் 30ல் பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்தார். பெற்றோரின் போராட்டத்திற்கு பிறகு பள்ளி நிர்வாகிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நேற்று பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மாணவர் அஸ்விந்த் வீட்டில் அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். கட்சி சார்பில் 5 லட்ச ரூபாய் நிதியையும் வழங்கினார்.
அவர் தெரிவித்ததாவது:
மாணவன் மர்மமான முறையில் ரத்த காயங்களுடன் இறந்த நிலையில், வலிப்பு என்று கூறி உடலை மருத்துவமனையில் போட்டுச் சென்றது கொடூரமான செயல். போலீசாரின் நடவடிக்கை ஒருதலைப் பட்சமாக இருந்துள்ளது.
மாணவனின் மரணத்திற்கு சி.பி.ஐ., விசாரணை தேவை என்று பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். நாங்களும் கோரிக்கை வைக்கிறோம். அனுமதிக்கவில்லை என்றால் நீதிமன்றம் மூலம் சி.பி.ஐ., விசாரிக்க கோருவோம் என்றார்.