ADDED : மே 06, 2025 06:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை அரண்மனை வாசலில் காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலை கண்டித்து பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் பாண்டிதுரை தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் சத்தியநாதன், சொக்கலிங்கம், ராஜேந்திரன், மதுரை மாவட்ட முன்னாள்தலைவர் சசிராமன் முன்னிலை வகித்தனர். கோட்ட பொறுப்பாளர்நரசிங்க பெருமாள், முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா பயங்கரவாத தாக்குதலை கண்டித்து பேசினர்.
மாவட்ட துணைத் தலைவர் சுகனேஸ்வரி, நகர் தலைவர் உதயா, மாவட்ட செயலாளர்கள் நாகராஜன், சங்கரசுப்பிரமணியன், மார்த்தாண்டன்,நகர் பொது செயலாளர் பாலா, சதீஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.