நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரையில் தேசிய உரிமைகள் களம் நுகர்வோர் அமைப்பின் சார்பில் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நிறுவனர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் பிரபாகர், இளைஞரணி தலைவர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர்.
சிவகங்கை மாவட்ட மேற்கு தலைவராக கேசவன்,செயலாளராக சரவணகுமார்,மானாமதுரை நகர செயலாளராக பால்ராஜ்,மண்டல தொழிற்சங்க செயலாளராக பாபு, மாவட்ட இளைஞரணி செயலாளராக செல்வகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நகரச் செயலாளர் பால்ராஜ் நன்றி கூறினார்.

