UPDATED : நவ 06, 2026 07:05 PM
ADDED : நவ 05, 2026 04:28 PM

அ நிறம் | அளவு
சிவகங்கை: பத்திரம் உள்ளிட்ட பதிவு ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றும் முறையை தனியாரிடம் ஒப்படைக்கும் அரசின் உத்தரவை கண்டித்து சிவகங்கையில் பத்திர எழுத்தர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சிவகங்கை மாவட்ட பத்திர பதிவு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆவண எழுத்தாளர் நல சங்க தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் பாண்டியராஜன், ஆறுமுகம், உதய குமார், ஜமீல் முன்னிலை வகித்தனர். பத்திரம் தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கண்ணன், சாந்தகுமார், சுரேஷ், மைதீன், ரவி பேசினர். பத்திர எழுத்தர்கள் பங்கேற்றனர். ///
