ADDED : ஜூலை 12, 2026 01:24 AM

சிவகங்கை: சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் மன்னர் முத்து விஜய ரகுநாத சசிவர்ண பெரிய உடையாத்தேவர் நுால் வெளியீட்டு விழா நடந்தது.
ராமநாதபுரம் சமஸ்தான ராஜேஸ்வரி நாச்சியார் தலைமை வகித்து நுாலை வெளியிட சிவகங்கை தேவஸ்தான மதுராந்தகி நாச்சியார் பெற்றுக்கொண்டார். மன்னர் கல்வி நிறுவனங்களின் முகவாமை குழு உறுப்பினர் மஹாலட்சுமி, ராமநாதபுரம் சமஸ்தான அஸ்மிதா முன்னிலை வகித்தார்.
மன்னர் கல்வி நிறுவன செயலர் குமரகுரு வரவேற்றார். புதுச்சேரி பல்கலை கலாசாரம் மற்றும் கலாசார உறவுகள் முன்னாள் இயக்குநர் கிளமெண்ட் ச.லுார்து சிறப்பு செய்தார்.
புதுச்சேரி பல்கலை பேராசிரியர் ரவிக்குமார் மதிப்புரை வழங்கினார். கல்லுாரி மேம்பாட்டுக் குழு சுடலைமுத்து, பேராசிரியர்கள் மார்க்ஸ், பழனிவேலு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன மணவழகன், புனித ஜேம்ஸ் மேல்நிலைப்பள்ளி கற்பகவள்ளி, ஆசிரியர் மரியஜெயராணி, ஆசிரியர் ஓய்வு ராஜேந்திரன், வரலாற்று ஆய்வாளர்கள் முனிராஜ் வானதிராயன், தேவி முத்து, செல்வமுத்துமாரி, தேவஸ்தான மேலாளர் இளங்கோ, தலைமை ஆசிரியர் சுந்தரராஜன், சிவகங்கை சமஸ்தான சத்திர மேலாளர் பூசை, தலைமை ஆசிரியர்கள் ராமலட்சுமி,ரேணுகா தேவி, சண்முக செல்வி, மைதிலி கலந்து கொண்டனர். ஆய்வாளர் சுசில்குமார் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.
