/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குத்துச்சண்டை போட்டி மாணவர்களுக்கு பாராட்டு
/
குத்துச்சண்டை போட்டி மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : ஜன 04, 2025 03:58 AM

சிங்கம்புணரி: சிவகங்கையில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற சிங்கம்புணரி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப் பட்டது.
பள்ளிக் கல்வித் துறை சார்பில் சிவகங்கையில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி பல்வேறு எடைப் பிரிவுகளில் நடந்தது.
இதில் சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 28 பேர் பங்கேற்றனர். அவர்களில் திவியன், முகமது சபீர், சசிகரன், அப்துல் ரசாக், முகமது ஆரிப்கான், அஜ்மல் ஆகியோர் தங்கம் வென்றனர்.
இவர்கள் தவிர 6 பேர் வெள்ளியும், 13 பேர் வெண்கல பதக்கங்களும் பெற்றனர். தங்கம் வென்ற மாணவர்கள் திருவாரூரில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை தலைமையாசிரியர் முருகன், உதவி தலைமை ஆசிரியர் ரஜினி, உடற்கல்வி இயக்குநர் முத்து, உடற்கல்வி ஆசிரியர்கள் பாரதி, பாஸ்கர், ஆசிரியர் அர்ச்சுனன் பாராட்டினர்.