
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை அரசு குடியிருப்பு வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. கவுன்சிலர் வண்ணம்மாள் வரவேற்றார். நகராட்சி தலைவர் துரைஆனந்த் தலைமை வகித்தார். பொங்கல் வைத்து வழிபட்டனர்.
வில்வித்தை, மல்லர் கம்பம், மல்லர் கயிறு, கோலப் போட்டிகள் நடத்தினர். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் ராதா கிருஷ்ணன் பங்கேற்றார்.
* கண்டாங்கிப்பட்டி மெளண்ட் லிட்ரா பள்ளியில் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். கலை நிகழ்ச்சிகள், கும்மியாட்டம், கோலாட்டம், நாட்டுபுற நடனங்கள் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.